
வெனிசுலாவின் லாகுவைராவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு மாதம் கடந்தும், இடிபாடுகளுக்கு அடியில் உள்ள உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சேதமடைந்த கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உடல்களை மீட்காமல் இடத்தை காலி செய்ய மாட்டோம் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நிலநடுக்கத்தில் தனது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை இழந்த லூயிஸ் மார்டினேஸ் என்பவர், இடிபாடுகளைத் தோண்டி உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.