
ஃபின்லாந்தில் நடைபெற்ற ஆர்க்டிக் ஓபன் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
ஜப்பானின் ரிகோவுடன் மோதிய சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதி சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரச்சனோக் இன்டனானை அவர் எதிர்கொள்கிறார்.