
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் 45 நாள் காலக்கெடு நிறைவடைந்ததை அடுத்து இன்றுடன் நிறுத்தப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 அடியாகவும், நீர் இருப்பு 24.046 டி.எம்.சி.யாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அணையில் போதிய நீர் இல்லாததால் சம்பா பயிர்கள் வாடத் தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழையே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.