
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 8 வாரங்களாக உயர்ந்து, ஆகஸ்ட் 21 நிலவரப்படி 729.33 பில்லியன் டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 8 வாரங்களில் மட்டும் 63 பில்லியன் டாலர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 21-ல் முடிந்த வாரத்தில் மட்டும் 12.4 பில்லியன் டாலர் உயர்வு பதிவாகியுள்ளது.
இந்த கையிருப்பு உயர்வு சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு உயரும்போது இந்திய ரூபாயின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்திற்கு வலுவான பாதுகாப்பை வழங்கவும் ரிசர்வ் வங்கிக்கு உதவும்.