சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையை சமாளிக்க ரஷ்யாவிடம் இருந்து டீசலை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
இதன்படி நவம்பரில் 5 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் டிசம்பரில் 1 லட்சம் மெட்ரிக் டன் டீசல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான தற்காலிக உரிமத்தை அமெரிக்கா பெற்றுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்குவது அந்த நாட்டின் பண பலத்தை அதிகரிக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்த நிலையில், அவருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார்.