
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரின் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகமும் ராஜஸ்தானும் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.
முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் 363 ரன்களும், தமிழகம் 274 ரன்களும் எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 192/6 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்பு 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 23 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.