
பாரிஸில் நடந்துவரும் பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ஹினா அகேச்சியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 21-10, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சிந்து பைனலுக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டனின் பைனலுக்கு அவர் முதல்முறையாக முன்னேறியுள்ளார்.
நாளை நடக்கும் பைனலில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கொரியாவின் அன் ஷே யங்கை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.