
டாட்டூ குத்தும்போது பயன்படுத்தப்படும் ஊசிகள் கிருமி நீக்கம் செய்யப்படாவிட்டால் எச்.ஐ.வி மற்றும் கல்லீரல் அழற்சி போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தரமற்ற மைகளைப் பயன்படுத்துவதால் உடலில் வீக்கம், அரிப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற கடுமையான அலர்ஜி பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசர் சிகிச்சை மூலம் கருப்பு நிற டாட்டூக்களை எளிதாக அழிக்க முடிந்தாலும், மஞ்சள் மற்றும் பிங்க் போன்ற வண்ணமயமான டாட்டூக்களை அழிப்பது மிகவும் கடினம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.