
விழுப்புரத்தில் நடைபெற்ற 7-வது மாநில அளவிலான இளைஞர் தடகளப் போட்டியில் 36 மாவட்டங்களைச் சேர்ந்த 750 வீரர்கள் பங்கேற்றனர்.
18 முதல் 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி வீரர்கள் அதிக பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற வீரர்கள் செப்டம்பர் 1 முதல் 3 வரை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெறவுள்ள 21-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.