
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாக பாடப்பட்டு, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் பாடப்பட்டது.
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வந்தே மாதரம் பாடப்படும் என தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்.