
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எஃப்.ஐ.எச் உலகக் கோப்பைக்காக, இந்திய ஹாக்கி அணி தனது பாரம்பரிய நீல நிறத்திற்குப் பதிலாக காவி நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீல நிற செயற்கை ஆடுகளங்களில் வீரர்களின் தெரிவுநிலையை (visibility) மேம்படுத்தவே இந்த நிற மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிற மாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்த நிலையில், வீரர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.