
நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 நாட்களில் 100 மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
திமுரே பகுதியில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் 200-க்கும் மேற்பட்டோரை மீட்ட அவர், 6,200 மீட்டர் உயரம் வரை ஹெலிகாப்டரை இயக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் அறிவியல் பயின்ற பிரியா அதிகாரி, இதற்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் காயமடைந்த மலையேற்ற வீரர்களையும் மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.