
அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி தளங்களை உலகத்துடன் இணைக்க 4,100 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைக்கும் திட்டத்தை சிலி நாட்டின் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் நொடிக்கு 15 முதல் 30 தேராபைட் வேகத்தில் தரவுகளைப் பரிமாற முடியும் என்றும், இதற்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறைகளால் கேபிள்கள் பாதிக்கப்படாமல் இருக்க இரட்டைக் கவசம் பயன்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான அனுமதி மற்றும் நிதி திரட்டும் பணிகள் சுமார் 8 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.