
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த உத்தரவை எதிர்த்து கன்னட சாலுவாலி வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது எனத் தெரிவித்துள்ள அம்மாநில அரசு, இந்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.