மெக்சிகோவின் தெமஸ்கால்சிங்கோ நகரில் உள்ள நுவெஸ்ட்ரா செனோரா டி லா லுாஸ் தேவாலயத் திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கர பட்டாசு விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செப்டம்பர் 5-ம் தேதி இரவு நடந்த இந்த விபத்தில், இரு பாதிரியார்கள் உட்பட 64 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற திருவிழாவில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.