
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் ஹாக்கி பிரிவில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தில்பிரீத் சிங் இந்தப் போட்டியில் 4 கோல்கள் அடித்து அசத்தினார்.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.