
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு 'ட்ரம்ப் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றும் தனது யோசனையைக் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் முன்மொழிந்துள்ளார்.
பெருங்கடல்கள் பல நாடுகளில் பரவியிருப்பதால் அவ்வாறு பெயர் மாற்றுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று கூறி சுந்தர் பிச்சை அந்த யோசனையை நிராகரித்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கப் பயன்பாட்டிற்காக ஏற்கனவே சில புவியியல் இடங்களின் பெயர்களை மாற்றிய டிரம்ப், இந்த முறை தனது திட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.