
அடுத்த 5 ஆண்டுகளில் தனது உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் 30 முதல் 35 சதவீதத்தை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் 2031-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியின் மதிப்பு 25 பில்லியன் டாலரில் இருந்து 40-45 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், வரி விலக்குகளை 2041 மார்ச் 31 வரை நீட்டிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.