
சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா பாட்டியா முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'தி வான்: போர்ஸ் ஆப் தி பாரஸ்ட்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தீபக் மிஸ்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பேன்டஸி புராண திரில்லர் திரைப்படம், வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
1 நிமிடம் 56 வினாடிகள் கொண்ட இந்த டீசர், மர்மமான காட்டுக்குள் செல்லும் கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.