குழந்தைகளின் கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் வைரஸ், பாக்டீரியா தொற்றால் நிணநீர் சுரப்பிகள் வீக்கமடைவதை மருத்துவ மொழியில் லிம்ஃபாடெனிடீஸ் என அழைக்கின்றனர்.
வீக்கமடைந்த நிணநீர் கணுக்களில் வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் உணவுகளை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
குருதி பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் திசு பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து நவீன பிரத்யேக மருந்தியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.