
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் பொருட்டு eKYC கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48 சதவீதம் அளவுக்கு இந்த விரல் ரேகை சரிபார்ப்புப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்த eKYC பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் செப்டம்பர் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தச் சிறப்பு முகாம் நடக்கிறது.