
அமெரிக்காவில் நடந்துவரும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 72 கிலோ பிரிவு பைனலுக்கு இந்தியாவின் அம்ருதா பூஜாரி முன்னேறினார்.
அரையிறுதியில் இந்தியாவின் அம்ருதா 10–8 என்ற கணக்கில் சீனாவின் வென்ஜின் கியூவை வீழ்த்திய நிலையில், பைனலில் உக்ரைனின் இரினா சப்லோட்ஸ்காவை எதிர்கொள்கிறார்.
பெண்களுக்கான 59 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் கோமல் வெற்றி பெற்றுள்ளார்.