
இலங்கையின் காாலி சிறைச்சாலையில் கைதிகள் தங்கியிருக்கும் கட்டடங்களில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆண் மற்றும் பெண் கைதிகள் அறைகளில் இருந்து 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் சிறைச்சாலை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.