
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை அணி 41.67 சதவீத புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
இந்தியா மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.