
தேவரா திரைப்படத்தின் சுட்டமல்லி பாடலை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலியாக சித்தரித்து ஆபாச காட்சிகளை சில சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இச்செயலில் ஈடுபட்டவர்களையும் பரப்புபவர்களையும் விடமாட்டேன் என்றும், சாத்தியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் எச்சரித்துள்ளார்.
ஏஐ-யின் தவறான பயன்பாட்டிற்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும், இந்திய அரசும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.