
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் முழுமையான மின்சார மாடலான ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
800-வோல்ட் கட்டமைப்பில் 118.5kWh பேட்டரி கொண்ட இந்த கார், 543hp பவர் மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்துவதுடன், 535 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டது.
DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 22 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய இந்த எஸ்யூவி, மெர்சிடிஸ்-பென்ஸ் EQS மற்றும் பிஎம்டபிள்யூ iX கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறது.