
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர் 2' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகிறது.
படத்தின் புதிய போஸ்டரில் ரஜினிக்கு பின்னால் பலர் தண்ணீர் டம்ளருடன் நிற்பது, இது ஒரு குத்துப்பாடலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.