
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையுடன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.