
வங்கதேசத்திடம் முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, வரும் 22-ம் தேதி மேக்கே நகரில் கடைசி டெஸ்டில் விளையாடுகிறது.
முதல் டெஸ்டில் சொதப்பிய தொடக்க வீரர் ஜேக் வெதரால்டு நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
30 வயதான மேட் ரென்ஷா இதுவரை 29.31 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார்.