
பெல்ஜியம், லக்ஸம்பர்க், ஸ்வீடன், அயர்லாந்து, நெதர்லாந்து, எஸ்தோனியா மற்றும் பின்லாந்து ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகளிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் உள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
ஹேக்கர்கள் இணையம் மூலமாக குளிர்சாதன இயந்திரங்களின் வெப்பநிலையை 50 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதால், காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகிக் குப்பையில் வீசப்பட்டன.
பல்பொருள் அங்காடிகளின் அலுவலகப் பயன்பாட்டுக்காக ரிமோட் கண்ட்ரோல் மூலம் சரிசெய்ய வைக்கப்பட்டிருந்த இணைப்புகளை ஹேக்கர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.