
எத்தியோப்பியாவில் மத்திய அரசுக்கும் டைக்ரே பிராந்திய அமைப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.
மத்திய அரசுப் படைகள் மீது கிளர்ச்சிக் குழுக்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் ட்ரோன் உள்ளிட்ட வான்வழித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அம்ஹாரா மற்றும் டைக்ரே பிராந்தியங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் அரசு நடத்திய வான்வெளித் தாக்குதல்களில் 25-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.