
சுந்தர் சி மற்றும் குஷ்பு தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'மீசைய முறுக்கு 2' திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் ஆதி, இது இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் கானா கலைஞர்களின் உலகத்தைப் பேசும் பரந்த கதைக்களம் என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் உலகளாவிய திரையங்க வெளியீட்டை முன்னிட்டு கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை நகரங்களில் படக்குழுவினர் ரசிகர்களை சந்திக்கின்றனர்.