
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி, அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், சாட்சிகளை மிரட்டக்கூடாது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான கரூர் கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.