
ஸ்பேம் மற்றும் போலி அழைப்புகளைத் தடுக்கும் வகையில், வரும் நவம்பர் 1 முதல் தொலைபேசியில் அழைப்பவரின் உண்மையான பெயர் திரையில் தெரிவது கட்டாயம் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சிம் கார்டு வாங்கும்போது வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கேஒய்சி ஆவணங்களின் அடிப்படையில் பெயர்கள் காட்டப்படும் என்பதுடன், வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு 'இண்டர்நேஷ்னல் கால்' என காண்பிக்கப்படும்.