
பெங்களூருவில் முதுகில் கித்தார் இசைக்கருவியைச் சுமந்து கொண்டு ஸ்கூட்டரில் சென்ற சவுவிக் தத்தா என்பவருக்கு ஏஐ போக்குவரத்து கேமரா அபராதம் விதித்துள்ளது.
பின்னால் அமர்ந்திருந்த கித்தார் பேக்கை மனிதன் எனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட ஏஐ கேமரா, அவர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி ரூ.500 அபராதம் விதித்தது.
இதற்கான அபராத செல்லான் புகைப்படத்துடன் வந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர் பெங்களூரு போக்குவரத்து காவல்துறையைத் தொடர்புகொண்டு முறையிட்டுள்ளார்.