
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை விமர்சித்த எதிர்க்கட்சியினரிடம், கார் பந்தயத்திற்காக செலவிடப்பட்ட ரூ.24 கோடி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
தொகுதி சுற்றுப்பயணத்திற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்த நிலையில், நிதிப்பற்றாக்குறை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதித்தன.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சிரமத்தில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே கார் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.