
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தனக்கும் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை என வதந்திகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முந்தைய உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி பதவியேற்றார்.
எதிரிகளின் சதித்திட்டங்களை ஈரான் மக்கள் மொஜ்தபா காமேனியின் தலைமையின் கீழ் முறியடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர், தற்போது அவரோடு எழுத்துப்பூர்வமாகத் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.