
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது.
பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா, தபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.