
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காகத் திறக்கப்பட்ட காவிரி நீர், இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.
முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 777 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக உயர்ந்துள்ளது, இது நாளை கல்லணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தண்ணீர் வரத்தைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் சுறுசுறுப்புடன் தொடங்கியுள்ளனர்.