
ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிப்பதாக சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா சட்டப்பேரவையில் பேசியதற்கு அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருக்கலாம் என்று கருப்பையா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என்றும், மைதானத்திற்குள் இளைஞர்களின் திறமையை அடக்குவது குறித்துதான் பேசினேன் என்றும் எம்எல்ஏ கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.