
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் சரக்குகள் மற்றும் போக்குவரத்தை முறைப்படுத்த ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா பரிசீலனையில் உள்ளது.
இந்த மசோதாவின்படி, ஈரான் விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு சரக்கு மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் தனது நாணயத்தில் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்கக் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.