
2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளதற்கு அரியானா காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் சிங் ஹுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக அதிக பதக்கங்களை வென்று தரும் அரியானா வீரர்களைப் புறக்கணித்துவிட்டு, சர்வதேச போட்டிகளை நடத்த குஜராத்திற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
2026 காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற 39 பதக்கங்களில் 10 பதக்கங்களை அரியானா வீரர்கள் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.