
தன்னை மற்றும் சீமானை தொடர்ந்து கொச்சைப்படுத்தி விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சீமான் மீதான புகாரில் சுப்ரீம் கோர்ட்டில் இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்ட பிறகு, விஜயலட்சுமி தற்போது இந்த புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
என்னை பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது என அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.