
நாடு முழுவதும் 19.79 கோடி மின்சார நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது; இதற்காக ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் (RDSS) கீழ், 2.05 லட்சம் ஃபீடர்கள் மற்றும் 52.53 லட்சம் டிரான்ஸ்ஃபார்மர்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.
ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மின் பயன்பாடு துல்லியமாகக் கணக்கிடப்படுவதால், தவறான அளவீடு மற்றும் கரண்ட் பில் தொடர்பான புகார்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.