
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது விசாரணை நடத்த உரிமை மீறல் குழுவுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவை விவாதத்தின் போது முதல்வர் குறித்து ஆபாசமாகப் பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறுதலாகப் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாக மார்க்கண்டேயன் கூறிய போதிலும், அவை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும் என பேரவைத் தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.