
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வட தமிழ்நாடு மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21 சதவீதம் குறைவாகவே பதிவாகியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் நிலவும் மிதமான எல்-நினோ சூழல் பருவமழைக் காலத்தில் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மைய இயக்குனர் துரை கூறியுள்ளார்.