
ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா கட்டாயமாக்கப்படுவதை தவிர்க்க, அழைப்புகள் மற்றும் SMS-க்கு மட்டும் தனி ரீசார்ஜ் திட்டங்களை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் (TRAI) அறிவுறுத்தியுள்ளது.
28 நாள் செல்லுபடியாகும் காலத்திற்குப் பதிலாக 30 நாட்கள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் பயனாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப குறைந்த விலையில் சேவைகளைத் தேர்ந்தெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.