
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.