
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அதற்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ எனப் பெயரிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் முதல் பாதியில் சினிமா பயணத்தையும், இடைவேளைக் காட்சியாக அரசியலில் நுழையும் முடிவையும், இரண்டாம் பாதியில் அரசியல் பயணத்தையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.