
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட முடிவு செய்து, மாநிலச் செயலர் சலீமை வேட்பாளராக அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் ஆதரவு கோரி தவெக, காங்கிரஸ், விசிக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளிடம் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தவெக ஆதரவு கோரி அமைச்சர் ஆனந்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.